உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று பிரிட்டன் இளவரசி டயானாவின் மரணம். அவரது உயிரிழப்புக்கான உண்மைக் காரணம் என்னவென்று இதுவரை மர்மமாகவே உள்ளது. உலகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்ததாகக் கூறப்படும் பிரபலங்கள் பலர்.
நடிகர் புரூஸ் லீ, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன், சார்லஸ் டயானா என நீள்கிறது இந்தப் பட்டியல். இவர்களில் டயானா இறந்த நாள் இன்று.
ஆகஸ்ட் 31, 1997ஆம் ஆண்டு நள்ளிரவு பாரிஸ் நகரில் உள்ள ரிட்ஸ் ஹோட்டலில் இருந்து புறப்பட்டது டயானா சென்ற கார். டயானாவை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் துரத்த, அவரது மெர்சிடிஸ் பென்ஸ் கார் நூறு கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சீறிப் பறந்தது. ஒரு சுரங்கப்பாதையில் அதிவேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
பின்தொடர்ந்து வந்த புகைப்படக்காரர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததால் சிறிது தூரம் பின்னாலேயே வந்துள்ளனர். டயானாவின் கார் விபத்துக்குள்ளான இடத்தை சிறிது நேரத்திலேயே அடைந்த அவர்கள், கார் நொறுங்கிக் கிடந்த காட்சியை படம் எடுத்ததாகவும் செய்திகள் உண்டு.
விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் டயானாவின் காதலர் என்று கூறப்பட்டவரான எகிப்தைச் சேர்ந்த டோடி அல் பயீத்தும் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். விபத்தில் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் டயானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். டயானா தனது 36 வயதிலேயே மரணத்தை தழுவினார்.
உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, கார் விபத்துச் சம்பவம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது. விபத்துக் காட்சிகளை படம்பிடித்த புகைப்படக் கலைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த 20 பிலிம் ரோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், டயானா பயணித்த காரின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். பத்திரிகை புகைப்டக்காரர்கள் துரத்தியதால் தான் விபத்து நிகழ்ந்ததாகவும் பேசப்பட்டது. டயானாவின் மரணத்தில் இதுவரை விடை கிடைக்காத கேள்விகள் பல உண்டு. அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது எப்படி? காரை ஓட்டியவர் பணி நேரத்தில் போதையில் இருந்தது எப்படி? விபத்தில் சிறு காயம் கூட ஏற்படவில்லை எனக்கூறப்படும் டயானா உயிரிழந்தது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments