மல்லவப்பிட்டிய உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் பிரம்மாண்டமான இஸ்லாமிய கலை மற்றும் கலாசார பரிசளிப்பு நிகழ்வும், மினா மற்றும் அரபா ஆகிய இரு இல்லங்களுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டி நிகழ்வும் அதன் அதிபர் அஷ் -ஷேஹ் ஆசாத் ஹக்கீமி அவர்களின் தலைமையில் நாளை சனிக்கிழமை 19 ஆம் திகதி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 04.30 மணிவரை மிகக் கோலா கலமாக குருநாகல் மல்லவப்பிட்டிய அல்ஹம்ரா -ஆரம்பப் பாடசாலையின் திறந்த வெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரபல இஸ்லாமிய மார்க்க சொற்பளிவாளர்கள் ,உலமாக்கள் கல்விமான்கள் மற்றும் தேசிய ஊடகங்களின் ஊடகவியலாளர்கர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வினை சிறப்பிக்க உள்ளார்கள்.
அத்துடன் இன் நிகழ்வின் சிறப்பு அம்சமாக உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இரு இல்லங்களுக்கு இடையிலான சிறப்பு அறிவுக் களஞ்சியம் போட்டி நிகழ்வும் இடம்பெற உள்ளன.
இன் நிகழ்ச்சியினை இலங்கையின் பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளரும் சுயாதீன தொலைக்காட்சி ( ITN ) ஊடக நிறுவனத்தின் வசந்தம் TV சிரேஷ்ட செய்திவாசிப்பாளர் அப்துல் மஜீத் ஜெசீம் தொகுத்து வழங்க உள்ளமையும் குறிப்பிடதக்கதாகும்.
இன் நிகழ்வில் பார்வையாளர்களாக பொது மக்கள் அனைவரும் நிகழ்வினை கண்டுகழிக்க முடியும் என்பதாக விழாக் குழுவின் தலைவர் முகம்மத் அனீஸ் ஊடகளுக்கு தெரிவித்துள்ளார்.
0 Comments