சிட்னியின் முன்னாள் ஆசிரியர் கிறிஸ்டோவ்சன் தனது மனைவியை 40 வருடங்களிற்கு முன்னர் கொலை செய்தார் நியுசவுத்வேல்சின் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
1982ம் ஆண்டு ஜனவரிமாதம் லினட்டே டோவ்சன் சிட்னியின் வடபகுதி கடற்கரையிலிருந்து காணாமல்போனமை குறித்தே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தனது குழந்தைகளை பராமரிப்பதற்காக வந்த பெண்ணுடன் தடையற்ற உறவைபேணுவதற்காக டோவ்சன் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டினார் என வழக்கு விசாரணையின் அரச தரப்பு குற்றம்சாட்டியது.
எனினும் டோசனின் வழக்கறிஞர்கள் டோசனின் மனைவி காணாமல்போனமை குறித்து வேறு விளக்கம் உள்ளதாக வாதிட்டனர்.திருமதி டோசன் தன்மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்ட பின்னர் தனது குடும்பத்தை கைவிட்டிருக்கலாம் என அவர்கள் வாதிட்டனர்.
எனினும் இந்த ஊகத்தை நிராகரிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளது என நீதிபதி இயன் ஹரிசன் தெரிவித்தார்.
திருமதி டோசனின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை இதனால் அவரது கணவருக்கு எதிரான வழக்கு முற்றிலும் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டது என தெரிவித்த நீதிபதி டோசனின் மனைவிதனது குழந்தைகள் குடும்பத்தினர் மீது பெரும் அன்பை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்தார்.
மற்றவர்களின் அவதானிப்புகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது காணாமல்போன பெண் தனது கணவரை மிகவும் நேசித்தார்,இதன் காரணமாக அந்த பெண் குடும்பத்திலிருந்து விலகிச்செல்வதற்கான முடிவை எடுத்திருப்பார் என கருதுவதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அந்த பெண் காணாமல்போனவேளை தன்னுடன் எதனையும் எடுத்துச்செல்லவில்லை நீண்டகாலம் தனித்து வாழக்கூடிய பொருளாதார பலமும் அவரிடம்இல்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அவர் அதன் பின்னர் தனது உறவினர்கள் நண்பர்களை ஒருபோதும் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்த நீதிபதி அந்த பெண் எதிர்காலம் குறித்து பல திட்டங்களை வைத்திருந்தார் இதனால் அவர் தானாக காணாமல்போனார் என கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லினெட் டோசனின் குடும்பத்தவர்கள் இந்த தீர்ப்பிற்காக நீதிமன்றத்தின் வெளியே காணாப்பட்ட தங்கள் ஆதரவாளர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காணாமல்போன பெண்ணின் சகோதரர் அந்த பெண்ணின் உடல் எங்கிருக்கின்றது என டோவ்சன் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments