சந்திரமண்டல ஆய்வுப் பயணத்துக்காக புதிதாக தயாரிக்கப்பட்ட பாரிய ரொக்கெட்டை நேற்று விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கையை நாசா நிறுவனம் கைவிட்டது.
100 மீற்றர் நீளமான இந்த ரொக்கெட் முதல் தடவையாக கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து சந்திரனை நோக்கி, உள்ளூர் நேரப்படி திங்கள் காலை ஏவப்படவிருந்தது.
எனினும், இந்த ரொக்கெட்டின் என்ஜினை உரிய வெப்பநிலைக்கு குளிர்விப்பதற்கு கட்டுப்பாட்டாளர்கள் சிரமப்பட்டனர்.
அதையடுத்து, இந்த ரொக்கெட்டை ஏவும் திட்டத்தை நாசா நிறுவனம் கைவிட்டது.
ஸ்பேஸ் லோன்ஞ் சிஸ்டம் (எஸ்.எல்.எஸ்.) ஆர்டேமிஸ்1 (Space Launch System (SLS) Artemis 1 ) எனும் இந்த ரொக்கெட்டின் அடிப்பகுதியில் 4 என்ஜின்கள் உள்ளன. அவற்றில் ஒன்று முறையாக குளிர்ச்சியடையவில்லை எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.
50 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இதற்காக 100 அடி நீளமான பாரிய ரொக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சந்திரன் ஆய்வுப் பயணத்துக்காக இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ரொக்கெட் இதுவாகும்.
இந்த ரொக்கெட் ஏவப்படுவதை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் உள்ளூர் கடற்கரைகளில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
எனினும் ரொக்கெட் ஏவும் திட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைவிப்பட்டமை சரியானது என நாசா நிர்வாகியான பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.
அனைத்தும் சரியாக அமையும் வரை அதை நாம் ஏவமாட்Nடுhம் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ரொக்கெட்டை நாசா ஏவுவதற்கு வாய்ப்புள்ளது.
எனினும், எனினும் என்ஜினை மாற்றுவதற்காக ரொக்கெட்டை கென்னடி ரொக்கெட் பொருத்தல் நிலையத்துக்கு மீண்டும் கொண்டுசெல்ல திட்டமிட்டால், இந்த ரொக்கெட்டை ஏவும் நடவடிக்கை பல வாரங்கள் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments