பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தங்கள் நாடு முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய நிலையில் அந்த நாடு மேலும் சர்வதேச உதவிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பருவகால மழையால் ஏற்பட்ட இந்த அனர்த்தங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏனைய நாடுகள் உதவிகளை வழங்கியபோதும் மேலும் நிதி தேவைப்படுவதாக உள்துறை அமைச்சின் அதிகாரி சல்மான் சூபி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 1,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்து இருப்பதாக சூபி தெரிவித்துள்ளார். கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து, வலுவான திடீர் வெள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால் நாட்டின் வட மேற்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நாட்டின் தென் மேற்கில் உள்ள சிந்த் மாகாணம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அயிரக்கணக்கானவர்கள் இடம்யெர்ந்துள்ளனர்.
வெள்ளங்களால் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெங்பாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்கள்தொகையில் சுமார் 15 வீதமாகும்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments