Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

10 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுகிறது டெஸ்லா...!

 

அமெரிக்காவில் 10 இலட்சத்து 10 ஆயிரம் கார்களை மின்னணு கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான டெஸ்லா திரும்பப்பெறுகிறது.

டெஸ்லா கார்களின் ஜன்னல்கள் மிக வேகமாக மூடப்படுவதால் மக்களின் விரல்கள் காயமடையலாம் என்பதால் இவ்வாறு திரும்ப பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், "திரும்ப பெறல்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை டுவிட்ரில் விமர்சித்துள்ளார்.

அதவாது, “சொற்களஞ்சியம் காலாவதியானது மற்றும் துல்லியமற்றது. இது ஒரு சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் புதுப்பிப்பு. எங்களுக்குத் தெரிந்த வரையில், எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

திரும்பப் பெறும் கார்களில் குறிப்பாக 2017-22 மொடல் 3 செடான்கள் மற்றும் சில 2020-21 மொடல் Y SUVs (விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள்), மொடல் S செடான்கள் மற்றும் மொடல் X SUVs ஆகிய நான்கு டெஸ்லா மொடல்களையும் உள்ளடக்கியுள்ளது.

டெஸ்லா ஆகஸ்ட் மாதம் உற்பத்தி பரிசோதனையின் போது தானியங்கி ஜன்னல்களில் உள்ள சிக்கலைக் கண்டறிந்தது.

நவம்பர் 15 முதல் உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்களில், சிக்கலைத் தீர்க்க தேவையான மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஏற்கனவே உள்ளதாக நிறுவனத்தின் ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

Post a Comment

0 Comments