Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

12 இந்திய மீனவர்கள் கைது…!

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு மற்றும் அலம்பில் கடற்கரையில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

அவர்கள் பயணித்த படகில் இருநடத மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments