அமெரிக்காவில், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி, 14 ஆண்டுகளில் 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அடுத்த குழந்தைக்கு காத்திருக்கும் அவர்கள், 20 குழந்தைகள் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கார்லோஸ் - பட்டி ஹெர்னாண்டஸ் தம்பதி, 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தற்போது 40 வயது ஆகிறது. இந்த தம்பதி இதுவரை 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இவர்களது ஆறு ஆண், 10 பெண் குழந்தைகளில் ஆறு பேர் இரட்டைக் குழந்தைகள். இந்நிலையில் ஹெர்னாண்டஸ் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
20 குழந்தைகள் பெற்றுக் கொள்வதே லட்சியம் என கூறும் இந்த தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு, 'சி' என்ற எழுத்தில் துவங்கும்படி பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வீட்டில் உள்ள ஐந்து படுக்கை அறைகளில், குழந்தைகளுக்கான அடுக்கு படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பராமரிப்புக்காக வாரத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக கார்லோஸ் கூறினார்.
0 Comments