வியட்நாமின் தென் பகுதியில் ஓர் இசைக் கூடத்தில் தீப்பற்றியதில் 14 பேர் உயிரிழந்திருப்பதோடு, மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாயன்று கட்டடத்தின் 2 மற்றும் 3ஆவது மாடிகளில் தீப்பற்றியது. அவற்றில் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் சிக்கிக்கொண்டதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது. தீயிலிருந்து தப்பிப்பதற்குப் பலரும் மொட்டை மாடியில் கூடியதாகவும் சிலர் கட்டடத்திலிருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இசைக் கூடம் கூட்டம் நிறைந்த குடியிருப்புப் பேட்டையில் அமைந்துள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பாளர்கள் பலர் ஈடுபட்டனர். மீட்புக் குழுக்கள் கட்டடத்தில் சிக்கியிருப்போரைத் தேடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments