Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமீரகத்‌தின்‌ அடுத்த பிரம்மாண்டம்‌: 16 டன்‌ உப்பைக்‌ கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “உலகின்‌ மிகப்பெரிய செயற்கை உப்பு குகை”"...!!



நாம்‌ எண்ணிப்பார்த்திராத பல விஷயங்களை நம்‌ முன்னே நனவாக
உலகை 
திரும்பி பார்க்க வைப்பதில்‌ அமீரகத்திற்கு எப்போதும்‌ தனி
இடம்தான்‌. ஒவ்வொரு வருடமும்‌ புதுமைகளிலும்‌ புதுமையை
படைத்துக்கொண்டிருக்கும்‌ அமீரகத்தில்‌ தற்பொழுது அதன்‌ வரிசையில்‌
புதிதாக ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.


பொதுவாகவே குகை என்று சொல்லும்‌ போது மலைகளுக்கு நடுவிலோ
காட்டுப்பகுதியிலோ பாறைகளைக்‌ கொண்டிருக்கும்‌ குகைகள்தான்‌
நமக்கு தெரியும்‌. ஆனால்‌ அமீரகத்தின்‌ அல்‌ அய்னில்‌ உப்பினால்‌ உருவாக்கப்பட்ட மிகப்‌ பிரம்மாண்டமான குகையானது திறந்து
வைக்கப்பட்டுள்ளது. இது போலந்‌தின்‌ இராகோவில்‌ உள்ள முதல்‌ இயற்கை

உப்பு சுரங்கத்தை அடிப்படையாகக்‌ கொண்ட இந்த குகை “மனிதனால்‌ உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உப்பு குகை மற்றும்‌ பிராந்தியத்தின்‌ ஒரே ஒரு உப்பு குகை” ஆகும்‌.

ஒரு ஊடக வெளியீட்டுன்‌ படி, சால்ட்‌ கேவ்‌ என அழைக்கப்படும்‌ உப்பு
குகை, சொரியாசிஸ்‌, ஆர்த்ரிடிஸ்‌, சைனசிடிஸ்‌, ஆஸ்துமா மற்றும்‌
எக்ஸிமா, அத்துடன்‌ பதட்டம்‌, குறட்டை, ஓவ்வாமை, சளி, காய்ச்சல்‌,
நெரிசல்‌, காது தொற்று, வைக்கோல்‌ காய்ச்சல்‌ மற்றும்‌ நாசுயமற்கு உட்பட
கிட்டத்தட்ட 18 பிரச்சனைகளுக்கு இயற்கையான சிகிச்சையை
வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

171 சதுர மீட்டர்‌ பரப்பளவில்‌ கட்டப்பட்ட இந்த 'குகை' சமீபத்தில்‌ ஷேக்‌
டாக்டர்‌ சயீத்‌ பின்‌ தஹ்னூன்‌ அல்நஹ்யான்‌ அவர்களால்‌ திறந்து
வைக்கப்பட்டது. அல்‌ அய்ன்‌ நகரின்‌ 1/0ஈ2௭சு்‌ கி! ரசள்ச இல்‌, நகர
முனி௫பாலிட்டி இயக்குனர்‌ சுவைதான்‌ சயீத்‌ அல்‌ கத்பிமற்றும்‌ சேலம்‌ அல்‌
ரஷிதி முன்னிலையில்‌ இந்த குகை திறக்கப்பட்டது

இது சுமார்‌ 35 பேர்‌ தங்கக்கூடிய அளவிலும்‌ ஆறு மாதங்கள்‌ மற்றும்‌ அதற்கு
மேற்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப்‌ பகுதி, தோல்‌ இருக்கைகள்‌,
காற்றோட்ட அமைப்பு, சுவர்கள்‌ மற்றும்‌ தரைகள்‌ போன்றவை சுமார்‌ 16
டன்‌ இயற்கை உப்பைக்‌ கொண்டு மூடப்பட்டிருக்கும்‌ அமைப்பிலும்‌
வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும்‌ அங்‌கிருக்கும்‌ காற்று
மற்றும்‌ உப்பானது பம்ப்‌ செய்யப்பட்டு காற்று சுழற்‌ மூலம்‌ சுத்திகரிப்பும்‌
செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த குகையில்‌ ஐரோப்பாவில்‌ அங்கேகரிக்கப்பட்ட ஒரு சிறப்பு வகை
உப்பானது பயன்படுத்தப்படுகிறது. தரையில்‌ போடப்பட்டிருக்கும்‌
உப்பானது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும்‌
என்றும்‌ அதேநேரத்தில்‌ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும்‌ உப்பானது
ஓவ்வொரு அமர்வுக்குப்‌ பிறகும்‌ மாற்றப்படும்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதும்‌ குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments