ஈரானில், ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழந்தமைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
குர்து இன பெண்ணான மாசா அமினி (Mahsa Amini) , தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றிருந்தபோது, தலையை மறைக்கும் ஹிஜாப்பை முறையாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார். கடந்த 16 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.மாசா அமினி
22 வயதான மாசா அமினி, கைது செய்யப்பட்ட பின்னர் தலையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தார் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், அதிகாரிகள் இதை நிராகரித்துள்ளதுடன் மாரடைப்பினால் மாசா அமினி உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
மாசா அமினியின் மரணத்தையடுத்து, ஈரானில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தெஹ்ரானில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில்… (AFP Photo)
பெண்கள் பலர் தமது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தலைமயிரை கத்தரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.. வெளிநாடுகளிலும் இம்மரணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேற்படி ஆர்ப்பாட்டங்களின்போது இதுவரை குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெஹ்ரானில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில்… (AFP Photo)
இறந்தவர்களில் ஐவர் பாதுகாப்புப் படையினர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களால் பொலிஸ் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ஈரானின் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில்… (AFP Photo)
இதேவேளை, புகைப்படப்பிடிப்பாளர்களான நிலவ்பர் ஹமேதி, யால்டா மோயேரி ஆகியோரும் செயற்பாட்டாளர் மொஹம்மத் ரெஷா ஜெலய்போர் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை கைது சயெ;யப்பட்னர் என ஈரானிய ஊடகடங்டகள் தெரிவித்துள்ளன.
0 Comments