ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் ஆப்கானிஸ்தான் வெல்லும் பட்சத்தில் இந்தியா அடுத்து சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு சற்றே இருந்தது. இதனால் ஆப்கானிஸ்தானின் வெற்றியை இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியை 129 ரன்களுக்கு பாகிஸ்தான் கட்டுப்படுத்தியது. இப்ராகிம் ஜாத்ரன் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். அடுத்து 130 ரன் என்ற எளிய இலக்குடன் ஆடிய பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீரர்கள் நேர்த்தியான பந்துவீச்சாலும் ஃபீல்டிங்காலும் திணறடித்தனர்.
கேப்டன் பாபர் ஆசம் ரன் எடுக்காமலும் ஃபக்கர் ஜமான் 5 ரன்னிலும் ரிஸ்வான் 20 ரன்னிலும் வெளியேறினர். இஃப்திகர் 30 ரன்னும் ஷதாப் கான் 36 ரன்னும் எடுத்து பாகிஸ்தானை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஆனால் இறுதிக்கட்டத்தில் ஆட்டம் தலைகீழானது. பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது. ஆனால் கை வசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
இதனால் ஆப்கானிஸ்தானின் வெற்றிபிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் முதல் 2 பந்தையும் சிக்சருக்கு தூக்கி நசீம் பாகிஸ்தானை வெற்றிபெறவைத்தார். நூலிழையில் ஆட்டத்தை பறிகொடுத்த அதிர்ச்சியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உறைந்து போயினர். இவ்வெற்றி மூலம் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் சந்திக்கிறது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments