இருபதாயிரம் அடிக்கு மேலாக புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விளையாடப்பட்ட கால்பந்து போட்டி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழு பிரபல கால்பந்து வீரர்களை உள்ளடக்கிய அணிகள் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்றன .
விமானத்துக்குள் 75 சதுர மீட்டர் பரப்பு கொண்ட மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்ட 20,230 அடி உயரத்தில், இரு அணிகளும் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் பறந்து பறந்து பந்தை உதைத்து தங்களுக்கே உரிய கிக்குகளால் ஆட்டத்தை உற்சாகமாக்கினர்.
பிரபல போர்ச்சுகல் ஜாம்பவனான் லுயிஸ் ஃபிகோ (LUIS FIGO) தனக்கே உரிய பைசைக்கிள் கிக்கில் கோல் அடித்த விதம், கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த கால்பந்து விளையாட்டு, கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.
“கால்பந்து எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது. நான் மைதானங்களில் விளையாடியிருக்கிறேன். இந்த அழகான விளையாட்டான கால்பந்து மீது பெரும் காதல் கொண்ட அச்சமற்ற வீரர்கள் அடங்கிய குழுவுடன் இதுவரை விளையாடாத உயரத்தில் கால்பந்து விளையாடியது பெரும் உற்சாகத்தை அளித்தது, ”என்று போட்டிக்குப் பிறகு லுயிஸ் ஃபிகோ கூறினார்.
0 Comments