சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடந்த ஆண்டு வெளியிட்டது மத்திய அரசு. அதன்படி அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம், ஆபாசம், சமூக பிளவைத் தூண்டுதல் உள்ளிட்ட பொருள்படும் பதிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக பயனர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். புகார்களை விசாரிப்பதற்கென்று தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். புகார்கள் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதிகளின் கீழ் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜூலை மாதத்தில் மட்டும் 23 லட்ம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘பயனர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு என்றே வாட்ஸ்அப், தனி தொழில்நுட்பக் குழுவைக் கொண்டிருக்கிறது. தீங்கு நிகழ்ந்த பிறகு அதை அடையாளம் காண்பதைவிடவும் தீங்கு நிகழாமல் தடுப்பது மிக முக்கியம். தீங்கு விளைவிக்கும் விஷயங்களை தடுப்பதில் வாட்ஸ்அப் முன்னணியில் இருக்கிறது. பயனாளர்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார்.
வாட்ஸ்அப் பயனர்கள் எவ்வாறு புகார் அளிக்கலாம்.?
முறைகேடான அல்லது ஸ்பாம் அக்கவுண்ட் என்று அறிந்த வாட்ஸ்அப் கணக்குகள் பற்றிய புகாரை wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். மேலும், வாட்ஸ்அப் ஒரு உதவி மையத்தை உருவாக்கியுள்ளது. அதில் பயனர்கள் தங்கள் சந்தேகங்களை முன்வைக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் கிரீவன்ஸ் சென்டருக்கு தங்கள் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் புகார்களை கடிதம் மூலமாக அனுப்பலாம்.
நீங்கள் ஒரு வாட்ஸ்அப் கணக்கையோ அல்லது குழுவை பற்றியோ புகார் அளித்தால், அந்த கணக்கு அல்லது குழுவில் இருந்து புகார் அளித்த பயனரின் கணக்குக்கு அனுப்பப்பட்ட கடைசி ஐந்து செய்திகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஆய்வு செய்யும். புகார் அளித்த நபரின் பிரைவசிக்காக, அந்த விவரங்களும் அவருக்குத் தெரிவிக்கப்படும்.
தனிப்பட்ட புகாராக இல்லாமல், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் செய்தி, புகைப்படங்கள், வீடியோக்களையும் ‘report’ என்ற ஆப்ஷன் மூலம் புகார் செய்யலாம்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments