Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மன்னர் 3 ஆம் சார்ள்ஸின் மூத்த மகன் தானே எனக் கூறும் நபர்! வேல்ஸ் இளவரசராக வில்லியம் நியமிக்கப்பட்டமைக்கு அதிருப்தி…!

 


பிரித்­தா­னிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸின் மூத்த மகன் தானே எனக் கூறிக் கொள்ளும் அவுஸ்­தி­ரே­லிய நபர் ஒருவர், இள­வ­ரசர் வில்­லி­யமை வேல்ஸ் இள­வ­ர­ச­ராக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டமை குறித்து அதி­ருப்தி தெரி­வித்­துள்ளார்.

மன்னர் 3ஆம் சார்ள்ஸை மர­பணு பரி­சோ­த­னைக்கு உட்­படக் கோரி வழக்குத் தொடுக்­கப்­போ­வ­தா­கவும் அந்­நபர் கூறு­கிறார்.

சைமன் டொரன்ட் டே எனும் இந்­நபர் 56 வய­தா­னவர். இவர் ஒரு பொறி­யி­ய­லாளர் ஆவார்.
இள­வ­ரசர் சார்ள்­ஸுக்கும் அவரின் மனை­வி­யான கமீ­லா­வுக்கும் பிறந்த இர­க­சிய பிள்ளை தான் என சைமன் டொரான்ட் டே நீண்ட கால­மாக கூறி வரு­கிறார்.

மன்னர் 3 ஆம் சார்ள்ஸ், கமீலா

1966 ஏப்ரல் 5 ஆம் திகதி பிரிட்­டனின் போர்ட்ஸ்மௌத் நகரில் பிறந்­தவர் சைமன் டொரன்ட் டே. 8 மாத குழந்­தை­யாக இருக்­கும்­போது, கரண் டே, டேவிட் டே எனும் பிரித்­தா­னிய குடும்­ப­மொன்­றினால் தத்­தெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் அக்­கு­டும்பம் பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­றி­ய­தா­கவும் டொரன்ட் டே கூறு­கிறார்.

தற்­போது குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில் சைமன் டொரன்ட் டே வசித்து வரு­கிறார்.

சார்ள்ஸ், கமீலா தம்­ப­தியின் இர­க­சிய குழந்தை தான் என தனது வளர்ப்புப் பாட்டி தன்­னிடம் தெரி­வித்தார் என டொரன்ட் டே கூறு­கிறார்.சைமன் டொரன்ட் டே

1965 ஆம் ஆண்டில் சார்ள்ஸும் கமீ­லாவும் நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்­தனர் எனவும், தான் பிறப்­ப­தற்கு முன்னர் பிரித்­தா­னிய சமூக வல­யங்­க­ளி­லி­ருந்து கமீலா 9 மாதங்கள் காணாமல் போயி­ருந்தார். சார்ள்ஸ் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்­றுலா சென்­றி­ருந்தார் என டொரன்ட் டே கூறு­கிறார்.

அரசி 2 ஆம் எலி­ஸபெத், மன்னர் 3 ஆம் சார்ள்ஸ், கமீலா, இள­வ­ரசர் வில்­லியம் ஆகி­யோரின் இள­மைக்­கால புகைப்­ப­டங்­க­ளை­ளுடன் தனதும் தனது குழந்­தை­களின் புகைப்­ப­டங்­க­ளுக்கும் இடை­யி­லான உருவ ஒற்­று­மை­க­ளையும் அவர் வலி­யு­றுத்தி வரு­கிறார்.

தான் சார்ள்ஸின் வாரிசு என நிரூ­பிப்­ப­தற்­காக சார்ள்ஸ், கமீலா ஆகி­யோரின் மர­பணு மாதி­ரி­க­ளையும் டொரான்ட் கோரி வந்தார்.

இம்­மு­யற்சி வெற்­றி­ய­ளிக்­காத நிலையில், தனது நிலைமை தொடர்பில் 2ஆம் எலி­ஸபெத் ராணிக்கும் அவர் கடி­த­மொன்றை எழு­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இள­வ­ரசர் வில்­லி­ய­முக்கு முன்­னரே பிறந்­தவர் என்ற வகையில் தானே மன்னர் சார்ள்ஸின் முடிக்­கு­ரிய முதல் வாரி­சாக இருக்க வேண்டும் என்­கிறார் டொரன் டே.சார்ள்ஸ், டொரன்ட், கமீலாவின் இளமைக்கால தோற்றங்கள்.2 ஆம் எலி­ஸ­பெத்தின் மறை­வுக்குப் பின்னர் 3 ஆம் சார்ள்ஸ் மன்­ன­ரானார். அதை­ய­டுத்து அவரின் மூத்த மகன் இள­வ­ரசர் வில்­லியம், வேல்ஸ் இள­வ­ர­ச­ரா­கி­யுள்ளார். அரி­யணை ஏறு­வ­தற்­கான வாரி­சு­களில் முதல் நிலை­யி­லுள்­ள­வ­ருக்கே இப்­பட்டம் வழங்­கப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

‘அர­சிக்கும் எனது பிள்­ளை­க­ளுக்கும் இடை­யி­லான ஒற்­று­மைகள் எனக்கும் ஏனைய பல­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

இந்த ஒற்­று­மைகள் கார­ண­மா­கவே நான் சார்ள்ஸின் மகன் எனக் கூறு­வ­தாக பலர் எண்­ணு­கின்­றனர். ஆனால் அது உண்­மை­யல்ல.

எனது பிள்­ளைகள் பிறப்­ப­தற்கு நீண்ட காலத்­துக்கு முன்­னரே, சார்ள்ஸும் கமீ­லா­வுமே எனது பெற்றோர் என எனக்கு கூறப்­பட்­டது. இது தொடர்­பாக நான் ஆராய்ந்தேன். அதற்கு இந்த ஆதா­ரங்கள் வலிமை சேர்க்­கின்­றன’ என டொரன்ட் டே தெரி­வித்­துள்ளார்.டொரன்ட் டே, மன்னர் 3 ஆம் சார்ள்ஸ்

இந்­நி­லையில், இள­வ­ரசர் வில்­லி­யமை வேல்ஸ் இள­வ­ர­ச­ராக மன்னர் சார்ள்ஸ் அறி­வித்­ததால் தான் பணி­நீக்கம் செய்­யப்­பட்­டதைப் போல் உணர்­வ­தாக டொரன்ட் டே கூறு­கிறார்.
2 ஆம் எலி­ஸபெத் அரசி இறந்த பின்னர் தனது அடுத்த நட­வ­டிக்கை என்ன என்­பது குறித்து உலகம் முழு­வ­து­மி­ருந்து ஊட­கங்­களும் அரச குடும்ப விசி­றி­களும் தன்னை கேட்­கின்றர் என டொரன்ட் டே கூறு­கிறார்.

மன்னர் சார்ள்­ஸையும் அவரின் மனைவி கமீ­லா­வையும் மர­பணு பரி­சோ­த­னைக்கு உட்­பட நிர்ப்­பந்­திப்­ப­தற்­கான சாத்­தியம் குறித்து சிரேஷ்ட சட்ட அறி­ஞர்­க­ளுடன் தான் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும், இதற்கு அவர்கள் சாத­க­மான கருத்து தெரி­வித்­த­தா­கவும் டொரன்ட் டே கூறு­கிறார்.

மர­பணு பரி­சோ­தனை கோரிக்­கைக்கு சார்ள்ஸ் பதி­ல­ளிக்­கா­ததால் தான் ஏமாற்­ற­டைந்­துள்­ளாக டொரன்ட் டே கூறு­கிறார்.

‘அவர் எனது தந்தை இல்­லை­யென்றால், இப்­பி­ரச்­சி­னையை சுமு­க­மாக தீர்ப்­ப­தற்­கான கட்­டத்தை சார்ள்ஸ் கடந்து சென்­று­விட்டார்.

அவர் பதி­ல­ளிக்­காமல் இருப்­பது மேலும் பல சந்­தே­கங்­களை எனக்கு ஏற்­ப­டுத்­து­கி­றது என டொரன்ட் டே தெரி­வித்­துள்ளார்.

‘நான் மீண்டும் குடும்ப நீதிமன்றத்துக்கு செல்வேன். கடந்த தடவை நான் நான் நீதிமன்றம் சென்றபோது, சகல ஆதாரங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டால் மரபணு பரிசோதனை கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என நீதிபதி கூறினார்’ என்கிறார் சைமன் டொரன்ட் டே.

Post a Comment

0 Comments