இந்த பாரிய பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தேரின் எண்ணிக்கை 65ஆக உயர்வு- 300க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மண்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பூகம்பத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு ஓடி தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்பூகம்பம் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு விதித்த தடையை அடுத்து 2.1 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த செங்டுவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் லூடிங் கவுன்டியில் இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த பகுதியில் அதிகாரிகள் பல பசுமை வழிகளை ஏற்படுத்தி, மீட்பு பணியாளர்கள் லூடிங் பகுதிக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், பூகம்பத்திற்கு உயிரிழப்பு 65 ஆக உயர்ந்துள்ளது. 300 பேர் காயமடைந்துள்ளனர். 12 பேரை காணவில்லை. இவர்களில் 37 பேர் லூடிங் கவுன்டியின் கார்ஜே திபெத்திய சுயாட்சி பகுதியிலும் மற்றும் யான் நகரில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பூகம்பம் எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு பின்னர் ரிக்டரில் 3.0 அளவிலான மொத்தம் 10 நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஷிமியான் விரைவு சாலையில் 20 மேலாளர்கள் மற்றும் 336 கட்டுமான தொழிலாளர்கள் என 350 பேர் வரை பரிதவித்த நிலையில் நின்றனர்.
நிவாரண பணி மேற்கொள்ள வசதியாக விரைவு வீதி வழியே செல்ல 700 சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,900-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆயுத பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலநடுக்கம் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்று காலையில் இருந்து அவர்கள் காயமடைந்தவர்களை மீட்கும், சாலையை சீரமைக்கும், பாதிக்கப்பட்டோரை தேடும் மற்றும் பிற மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments