Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவிடமிருந்து 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவிகள்...!

 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு , 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருட்களை நன்கொடையாக சீனா வழங்கியுள்ளது. குறித்த நன்கொடை பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

மேலும் 5 பில்லியன் ரூபா பெறுமதியான மருத்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டு , அவை வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சிரமங்களில் மக்களுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்காக சீனா இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும் என்று இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.



நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் , உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட அமைப்புக்களும் இவ்வாறு இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments