Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கவனிக்கவும்... இளைஞர்களிடையே இதய நோய் அதிகரிக்க இந்த 6 வாழ்க்கை முறைதான் காரணமாம்!

  alarming-lifestyle-signs-of-heart-disease

சமீப நாட்களாக இதய நோயால் பாதிக்கப்படுவோர் குறித்தும், திடீர் மாரடைப்பால் இறப்பவர்கள் குறித்தும் கேள்வியுற்றிருப்போம். ஆனால் பெரும்பாலானோர் ஆரோக்கியமாக சாப்பிடுவதும் குடிப்பதும் முக்கியம் என்பதை காட்டிலும் உடலின் செயல்பாடு, மன அழுத்தத்தை நீக்குவது தொடர்பான காரணிகளை இளைஞர்கள் உட்பட எவருமே கருத்தில் கொள்ளாமல் அதை புறக்கணிக்கிறார்கள் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி, பெரும்பாலான மருத்துவ இருதய நோய் (குறிப்பாக கரோனரி தமனி நோய் மற்றும் பக்கவாதம்) நடுத்தர மற்றும் முதிய வயதினரிடையே ஏற்பட்டாலும், பெருந்தமனி தடிப்பு குழந்தை பருவத்திலேயே தொடங்குகிறது என்றும், 12 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினரிடையேயான இதய ஆரோக்கியம் ஆபத்தானது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

image

இது தொடர்பாக நியூயார்க் யூனிவர்சிட்டியின் மருத்துவ பயிற்றுவிப்பாளராக இருக்கக் கூடிய டாக்டர் ஜெனிஃபர் சாவோ கூறுகையில், அமெரிக்காவில் நான்கில் ஒரு ஆண் இதய நோயால் இறக்கிறார்கள். இந்த விகிதம் ஆப்பிரிக்க-அமெரிக்க ஆண்களிடையே அதிகமாகவும் உள்ளது.

ஆனால் புகைப்பிடித்தல் மற்றும் அதிக கொலஸ்ட்ராலுக்கு சிகிச்சையளித்து வருவதன் விளைவாக தொடக்கத்தில் இதய நோய் பாதிப்பு குறைவாக இருந்தாலும், நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு காரணமாக தற்போது இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை மேல்நோக்கி செல்கிறது எனக் கூறியுள்ளார்.

இதுபோக முக்கியமான 6 படிநிலைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாகவே இதய நோய் அதிகரிக்கிறது என்றும் மருத்துவர் ஜெனிஃபர் சாவோ தெரிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை காணலாம்.

1) High Cholesterol

அதிகளவிலான கொலஸ்ட்ரால் பாதிப்பு காரணத்தால் இதய நோய் அல்லது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். ஆகையால் நிறைவுறாத கொழுப்பை கட்டுப்படுத்தவும், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பைக் குறைக்கும் வகையிலான டயட்டை மேற்கொள்ளுமாறு மருத்துவர் ஜெனிஃபர் பரிந்துரைக்கிறார். இதனை செய்ய ஒரே எளிய வழியாக திரவ தாவர எண்ணெய் வகைகளான ஆலிவ் ஆயில் அல்லது கனோலா ஆயில் போன்றவற்றை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்துகிறார்.

2) High Blood Pressure

உயர் ரத்த அழுத்தம் ஒரு வகையான சைலண்ட் கில்லராகவே இருக்கிறது. இதயம் வலிமையுடன் இரத்தத்தை பம்ப் செய்வது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். காலப்போக்கில் உயர்ந்த ரத்த அழுத்தம் உங்கள் இதய தசையை தடிமனாக்கலாம். ஆகவே உப்பு உட்கொள்வதை குறைப்பதே உயர் ரத்த அழுத்தத்தைத் தடுப்பதற்கான எளிய வழி.

image

3) Diabetes and Obesity

நீரிழிவு, பக்கவாதம் போன்றவை இதய நோய்க்கான ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. அதுபோக, சிறுநீரக செயலிழப்பு, நரம்பு பாதிப்பு, பார்வையிழப்பு போன்ற பிற சிக்கல்களையும் ஏற்படுத்தும். மேலும், டையபட்டீஸால் வரும் உயர் ரத்த குளுக்கோஸ் உடலில் உள்ள ரத்த நாளங்களையும் நரம்பு செயல்பாடுகளையும் சேதப்படுத்தவல்லது. ஆகவே அதிகபடியான சர்க்கரையை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக ஆரோக்கியமான பழச்சாறுகளை குடிக்கலாம்.

4) Unhealthy Diet:

வெளியே செல்லும் போது ஆரோக்கியமான உணவைதான் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம் என ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுக்கக் கூட தயங்குகிறோம். அமெரிக்க உணவுமுறையானது அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெருகிய முறையில் அதிகமாகி வருகிறது, இது நீரிழிவு மற்றும் உடல் பருமன் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது. மதிய உணவு இறைச்சிகள், உறைந்த பீட்சா மற்றும் குக்கீகள் மற்றும் டோனட்ஸ் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது மோசமான சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்.

image

பழங்கள் மற்றும் காய்கறிகள் அல்லது உறைந்த அல்லது உலர்ந்த காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்த மாற்றாகும். மீன், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் காய்கறிகளை உள்ளடக்கிய உணவு இருதய ஆபத்தை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

5. Lifestyle and Stress From Work:

உயர் ரத்த அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை பழக்கங்களான அதிகபடியான உணவுகளை உட்கொள்வது, புகைப்பிடிப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவையெல்லாம் மன அழுத்தம் காரணமாக நிகழ்கிறது. உங்கள் மன அழுத்தத்தை கவனத்தில் கொள்வதும், அதற்கான சிகிச்சை மேற்கொள்வது முக்கியமாகும். அதேபோல உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை அன்றாட வழக்கத்தில் இணைத்துக் கொள்வதும் முக்கியமாக இருக்கிறது.

6) Lack of Exercise and a Sedentary Life:

கொரோனா ஊரடங்கின் போது ஏறத்தாழ எல்லா நிறுவனங்களும் மூடப்பட்டும், வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் பழக்கம் அதிகமானதால் உட்கார்ந்தே இருக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. இவற்றை தவிர்த்து வாரத்திற்கு 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுறுசுறுப்பாக இருப்பதற்கான மேலும் சில எளிய வழியாக வேலை செய்யும் போது அடிக்கடி எழுந்து நிற்பது, லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

Post a Comment

0 Comments