Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தூக்கிலிடப்பட்ட நிரபராதி; 70 வருடங்களுக்கு பின் மன்னிப்பு கோரிய இங்கிலாந்து பொலிஸ்...!

 

கொலைக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் சிறையில் தூக்கிலிடப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம், நீதி தவறியதற்காக இங்கிலாந்து பொலிஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒரு பிரிட்டிஷ் சோமாலியரான மஹ்மூத் மத்தான் (Mahmood Mattan), கார்டிஃப் நகரத்தில் உள்ள தனது துணிக்கடையில் 1952 ஆம் ஆண்டு செப்டெம்பரில் 41 வயதான லில்லி வோல்பர்ட் (Lily Volpert) எனும் பெண்ணை கொன்ற குற்றத்திற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இருப்பினும், 1998 இல் அவரது குடும்பத்தினரின் அயராத போராட்டத்திற்குப் பிறகு, மத்தான் குற்றம் புரியவில்லை என்று நிரூபிக்க அவருடைய மனைவி லோரா, டேவிட், ஒமர், மெர்வின் ஆகிய 3 மகன்களும் கடந்த 46 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

இது அக்காலத்தில் குற்றவியல் நீதி அமைப்பு உட்பட சமூகம் முழுவதும் இனவெறி, பக்கச்சார்பு, தப்பெண்ணம் பரவலாக இருந்த கால வழக்காகும் என, ஜெர்மி வாகன் (Jeremy Vaughan), சவுத் வேல்ஸ் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீதி தாமதமாகவே கிடைத்துள்ளதாக மத்தானின் பேத்தியான தான்யா குறிப்பிட்டுள்ளார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments