Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77 பேர் உயிரிழப்பு...!

 

லெபனானில் இருந்து குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 77 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (22) அன்று சிரிய நாட்டவர்கள் மற்றும் லெபனான் நாட்டவர்கள் உள்ளடங்கலாக 150 பேரை ஏற்றிக்கொண்டு குறித்த படகு பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு மத்தியதரைக் கடலில் கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் தெற்கு துறைமுக நகரமான டார்டஸ் கடற்கரையில் வித்துக்குள்ளானவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் சிரியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கின்றார். இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments