அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது மடிக்கணினிகளை பயன்படுத்துவது வயதாகும் செயல்முறையை வேகப்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் நாட்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது நாம் அனைவரும் 24 மணி நேரமும் ஸ்மார்ட்ஃபோன் அல்லது மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் வாட்ச் என ஏதோ ஒரு கேட்ஜெட் உடன் நமது பொழுதை கழிக்கிறோம். இந்த சாதனங்கள் அனைத்தும் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. இவை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமே.! அளவுக்கு அதிகமாக மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது நம் கண்களை பாதிக்கும் என்பதும் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த சாதனங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் நமது வயதாகும் செயல்முறை வேகமெடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
"ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங்" (Frontier in Aging) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற கேஜெட்களில் இருந்து நீல ஒளியை அதிகமாக வெளிப்படுத்துவது வயதான செயல்முறையை துரிதப்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இணை ஆசிரியர் ஜாட்விகா ஜிபுல்டோவிச், “டிவி, மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகள் போன்ற சாதனங்களிலிருந்து வெளிப்படும் அளவுக்கு அதிகமான நீல ஒளி தோல் மற்றும் கொழுப்பு செல்கள் முதல் உணர்ச்சி நியூரான்கள் வரையினால நம் உடலில் உள்ள பரந்த அளவிலான செல்களில் தீங்கு விளைவிக்கும்” என்று தெரிவித்தார்.
நீண்ட காலமாக நிலையான இருளில் வைக்கப்பட்டிருக்கும் மரபணுக்களுடன் நீல ஒளியின் அதிக நேரம் வைக்கப்பட்ட மரபணுக்களை ஒப்பிட்டு வயதாகுதல் செயல்முறையை நீல ஒளி வேகப்படுத்துவதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அளவுக்கு அதிகமான நீல ஒளி வெளிப்பாடு மனிதர்களில் மன அழுத்த ஹார்மோனைத் தூண்டும் என்றும் இது செல்களின் செயல்பாட்டைத் தூண்டி, நம்மை வேகமாக வயதாக்கி, முதுமைத் தோற்றமளிக்க வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நீல ஒளியானது தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, கேஜெட்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நீங்கள் முன்னதாகவே தூங்கலாம் மற்றும் வேகமெடுக்கும் வயதாகும் செயல்முறையையும் தடுக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments