Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜிபிஎஸ் உடன் இதையும் மொபைல் நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் - இந்தியா வைக்கும் செக்!

 

ஆப்பிள், சியோமி, சாம்சங் போன்ற மொபைல் நிறுவனங்கள் தங்கள் தொலைபேசிகளில் இனி ஜிபிஎஸ் மட்டும் பயன்படுத்தாமல் NavIC வசதியையும் பயன்படுத்த இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஆப்பிள், சியோமி, சாம்சங் போன்ற மொபைல் நிறுவனங்கள் தங்கள் தொலைபேசிகளில் இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளுக்கு அமெரிக்காவின் குளோபல் பொசிசனிங் சிஸ்டம் (Global Positioning System - GPS) அம்சத்தை பயன்படுத்தி வருகின்றன. முழுக்க முழுக்க வெளிநாடுகளைச் சார்ந்து இயக்கப்படும் இந்த சேவையை உள்நாட்டு தயாரிப்பாக மாற்ற இந்தியா முன்பே முடிவு செய்தது.



பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு இந்தியாவும் இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்க, இஸ்ரோ உதவியுடன் இந்தியாவில் NavIC (Navigation with Indian Constellation) வசதி பிராந்திய செயற்கைக் கோள்கள் அமைப்பின் வழியாக அறிமுகமானது. ஆனால் இந்த வசதி இந்திய மக்கள் அனைவருக்கும் இன்றுவரை முழுமையாக சென்று சேரவில்லை. ஏனென்றால் இந்த வசதியை மொபைல் நிறுவனங்கள் தங்கள் தொலைபேசியில் பயன்படுத்தும் வசதியை இன்றுவரை வழங்கவில்லை.



இந்தியாவின் NavIC வசதியை மொபைலில் பயன்படுத்த அனுமதிப்பதற்கு மொபைல் நிறுவனங்கள் செய்ய வேண்டிய வன்பொருள் மாற்றங்கள் (Software Changes) அதிக செலவாகும் என்பதால் இந்த வசதியை இன்னும் கிடப்பில் போட்டுள்ளன. ஆனால் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகியவை ஜிபிஎஸ்க்கு போட்டியாக தங்கள் சொந்த இருப்பிட வசதியை அறிமுகப்படுத்தி அதைத்தான் தங்கள் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் மொபைல்களில் பயன்படுத்தியும் வருகின்றன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் புதிய போன்களில் ஜிபிஎஸ் உடன் கூடுதலாக NavIC வசதியை ஆதரிக்கும் வகையில் வன்பொருள் மாற்றங்களைச் செய்ய ஸ்மார்ட்போன் நிறுவனங்களை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments