Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வெளிநாடொன்றின் அணுவாயுதங்கள் குறித்த இரகசிய ஆவணமும் ட்ரம்பின் இல்லத்தில் கைப்பற்றப்பட்டது: வொஷிங்டன் போஸ்ட்..!

 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புளோரிடா மாநில இல்லத்தில் எவ்.பி.ஐ. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், வெளிநாட்டு அரசு ஒன்றின் அணுவாயுத ஆற்றல்கள் ஆற்றல்கள் மற்றும் இராணுவப் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான இரகசிய ஆவணமொன்றும் அடங்கும் என வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் மார்-ஏ-லகோ (Mar-a-Lago) எனும் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், ஆவணத்தை பார்வையிட அரச அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி, அமைச்சரவை அல்லது அமைச்சரவை மட்டத்திலான அதிகாரியினால் மாத்திரம் அனுமதி அளிக்கப்படக்கூடிய பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவ்விடயத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்ததாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

குறித்த நாட்டின் பெயரை வொஷிங்டன் போஸ்ட் வெளியிடவில்லை.



மார்-ஏ-டலோ இல்லத்தின் எப்பகுதியில், எந்த வகையான பாதுகாப்பின் கீழ் மேற்படி ஆவணம் காணப்பட்டது என்பதையும் அப்பத்திரிகை தெரிவிக்கவில்லை.

மேற்படி இல்லத்தில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி எவ்.பி.ஐஅதிகாரிகள் தேடுதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments