கத்தார் A-Ring சாலையில் உள்ள பிரத்யேக பொதுப் பேருந்து பாதையில் அனுமதியின்றி பயணிப்போருக்கு 2 அக்டோபர் 2022 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று கார்னிச் ஸ்ட்ரீட் மூடல் அமலாக்கத் திட்டத்திற்கான குழு அறிவித்துள்ளது.
பொதுப் பேருந்துகள் மற்றும் டாக்சிகளைப் பயன்படுத்துவதற்காக இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பாதையை பயன்படுத்தும் அனைத்து அங்கீகரிக்கப்படாத வாகனங்களுக்கும், விதி 49-ன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபராதம் விதிப்பார்கள் என்றும், அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே பாதையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 இன் போது ரசிகர்களுக்கு சுமூகமான போக்குவரத்து அனுபவங்களை வழங்குவதற்காக இந்தப்பாதைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
A-Ring சாலையானது தோஹாவின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனெனில் இது பல்வேறு வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சேவை வசதிகள் மற்றும் பல சுற்றுலா தலங்களை இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி...
Qatartamil.com
https://qatartamil.com/2022/09/qatar-ban-unauthorised-use-of-bus-lane-on-a-ring-road/
0 Comments