தாய்லாந்து மகாராணி போன்று ஆடை அணிந்ததற்காக அந்நாட்டு செயற்பாட்டாளர் ஒருவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு பாங்கொக்கில் இடம்பெற்ற அரசியல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இளஞ்சிவப்பு ஆடை ஒன்றை அணிந்திருந்த 25 வயது ஜடுபோர்ன் நியு சியோங், அந்த ஆடை மூலம் அரச குடும்பத்தை அவமதித்ததாகக் குற்றங்காணப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த அவர், தாம் பாரம்பரிய ஆடை ஒன்றையே அணிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் தாய்லாந்து மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் ஏனையவர்களை விமர்சிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு அதற்கு எதிராக சட்டம் கடுமையாக உள்ளது.
0 Comments