Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நிலவுக்கு ரொக்கெட் ஏவுவதை மீண்டும் ஒத்திவைத்தது நாசா...!

 

நாசாவின் ஆர்டிமிஸ் 1 ரொக்கெட்டை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்தத் திட்டம் நீண்ட தாமதத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ரொக்கெட்டை ஏவும் கட்டுப்பாட்டாளர்களின் முயற்சி கடந்த சனிக்கிழமையும் எரிபொருள் கசிவால் தோல்வியில் முடிந்தது.

இந்த ரொக்கெட் விண்ணில் புறப்படுவதை காண புளொரிடா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றத்தையே சந்தித்தனர்.

இந்நிலையில் பொறியியலாளர்கள் ரொக்கெட்டை சோதிக்கவிருப்பதோடு ஏதேனும் பழுதுபார்த்தல் வேலை இருக்கும் பட்சத்தில் அது ஏவுதளத்தில் அன்றி பட்டறையிலேயே மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த செயற்பாடுகள் காரணமாக ரொக்கெட்டை ஏவும் திட்டம் பல வாரங்கள் தாமதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி இந்த ரொக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டபோதும் நான்கு எஞ்சின்களில் ஒன்று செயல்படாததால் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்க ஆய்வு மையத்தால் இதுவரை உருவாக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த ரொக்கெட் ஆக இருக்கும் ஆர்டிமிஸ் 1 நிலவுக்கு 50 ஆண்டுகளின் பின் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

Post a Comment

0 Comments