Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரோகித் விளாசிய சிக்ஸர்.. எல்லைக்கோட்டில் செக்யூரிட்டியின் பின் பக்கத்தை பதம்பார்த்த பந்து!

 


ஆசியகோப்பையின் இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும்.

இந்நிலையில், ரோகித் சர்மா விளாசிய சிக்ஸர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரோகித் சர்மா எல்லைக் கோட்டிற்கு வெளியே அடித்த பந்தானது. அங்கே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி காவலரை நோக்கி வந்தார். பயத்தில் அந்த செக்யூரிட்டி திரும்பிக் கொள்ளவே அவரது பின்பக்கம் மேலேயே பந்து பட்டது.



டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங்க் செய்ய அழைத்தது இலங்கை அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா போட்டிய தொடங்கிய நிலையில் 11 ரன்களில் இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. 6 ரன்களில் தீக்சனா வீசிய பந்தில் லெக்பை விக்கெட்டில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் ராகுல். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.



13 ரன்களில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது, ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினார். அவருக்கு சூர்ய குமார் யாதவ் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சிக்ஸர்களை விளாசித் தள்ளிய ரோகித் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்ய குமாரும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் இருவரும் தலா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹூடாவும் 3 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால், 200 ரன்கள் எட்டுவதற்காக வாய்ப்பு இருந்தும் இந்திய அணி கோட்டைவிட்டது.



20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். கருணரத்னே 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

அதிர்ச்சி கொடுத்த இலங்கை

174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை வீரர்கள் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இலங்கை அணியின் பதும் நிசங்கா, சரித் அசலங்கா ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தது. விக்கெட்டை இழக்காமல் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி தள்ளினர். இருவருவே அரைசதம் அடித்தனர். இந்திய அணி கிட்டதட்ட தோல்வியை நோக்கி சென்றது.

ஆனால், சாஹர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 12 வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் சாய்த்தார். பின்னர் இலங்கை அணி சரிவை நோக்கி சென்றது. பின்னர் அஸ்வின் ஒரு விக்கெட்டையும், சாஹல் மறுபடியும் ஒருவிக்கெட்டையும் சாய்த்தனர். இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 120 ரன் எடுத்தது. வெற்றிக்கு 30 பந்துகளில் 54 ரன்கள் தேவை.

Post a Comment

0 Comments