பிரிதானிய அரச குடும்ப வாரிசுகளான வில்லியம் (William) மற்றும் ஹாரி (Harry), கேட் மற்றும் மேகன் ஒரு காலத்தில் "Fab Four" என்று அழைக்கப்பட்டனர்.
இவர்கள் ஒன்றாக இளைய தலைமுறையினருக்கு முடியாட்சியின் முறையீட்டைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் இருந்தனர்.
ஆனால் 2018 ஆம் ஆண்டு விண்ட்சரில், அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான மேகனுடன் முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ கேப்டன் ஹாரியின் (Harry) திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் இரண்டு ஜோடிகள் ஒன்றாக இருப்பதைப் பார்ப்பது அறிதாகிவிட்டது. 37 வயதான ஹாரி (Harry), தானும் தனது சகோதரனும் வெவ்வேறு பாதையில் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் தானும் 41 வயதான மேகனும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச வாழ்க்கையை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இரண்டு ஜோடிகளும் கடைசியாக 2020 இல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த நிகழ்வில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
அதன்பின்னர் ஜூன் மாதம் ராணியின் (Queen Elizabeth II ) பிளாட்டினம் விழா கொண்டாட்டத்தின் போதும் அவர்கள் சந்திக்கவில்லை.
இந்நிலையில் பாட்டியின் மரணத்திற்குப் பிறகு இப்போது ஒற்றுமையாக காணப்படுகின்றனர். அதாவது ராணி எலிசபத்தின் (Queen Elizabeth II )நினைவாக எஸ்டேட் வாசலில் வைக்கப்பட்ட மலர்வளையங்களை பார்வையிட நால்வரும் ஒன்றாக காட்சியளித்தனர்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments