Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

 

அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார். 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கினார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது, கடந்த 3 மாதத்தில் 3-வது முறையாக நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வந்திருக்கிறேன். இதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று. உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. அடுத்ததாக டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் ஒரு ஸ்போர்ட்ஸ்நாதனாகவே மாறிவிட்டார். தனது துறையை எப்போதும் துடிப்புடன் வைப்பதற்காக செயல்பட்டு வருகிறார். திராவிட மாடலின் குறிக்கோளின் படி அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது என்றார். பிப்ரவரி மாதம் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன என்றும் கூறினார். அரசின் சிறப்பான செயல்பாடுகளால் விளையாட்டு துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments