உணவு, உணவுப்பழக்கம் குறித்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் உயிரிழந்த ஒருவரை அழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஜேக்கி, இங்கு இருக்கிறீர்களா? எங்கே இருக்கிறார், ஜேக்கி? அவர் இங்கு இருப்பார் என்று நினைத்தேன்,' என்று பைடன், குடியரசுக் கட்சியின் காலஞ்சென்ற உறுப்பினர் ஜேக்கி வலோர்ஸ்கியைக் கூட்டத்தில் அழைத்தார்.
மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வலோர்ஸ்கி கடந்த மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார்.
அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற எண்ணத்தில் பைடன் பேசியதைப் போல் தோன்றியது. வலோர்ஸ்கி மரணித்தபோது, ஜனாதிபதி இரங்கல் தெரிவித்திருந்தார்.
மாநாட்டில் உரையாற்றியபோது பைடன் வலோர்ஸ்கி குறித்து எண்ணியிருக்கலாம், அதனால் சற்றுக் குழப்பம் அடைந்திருக்கலாம் என்று வெள்ளை மாளிகைப் ஊடகச் செயலாளர் கரீன் ஷான் பியர் கூறினார்.
இந்த மாநாடு தொடர்பில் வலோர்ஸ்கி முக்கியப் பங்காற்றியவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments