Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

லிபியாவில் தொடரும் உள்நாட்டுப்போர் “கடாபி ஆட்சி கவிழ்ப்பின் விளைவா?”

 

லிபியாவில் தொடரும் தற்போதைய நெருக்கடியானது, அந்நாட்டின் மனிதாபிமான பிரச்சினையையும், அரசியல்-இராணுவ உறுதியற்ற தன்மையையும் தோற்றுவித்துள்ளது. லிபியாவில் நிகழ்ந்த 2011ஆம் ஆண்டின் அரபு வசந்த ஆர்ப்பாட்டங்களில் தொடங்கிய உள்நாட்டுப் போர், வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளை தொடர்ந்து கடாபியின் கோர மரணத்திற்கும் வழிவகுத்தது.



எண்ணெய் வளம் மிக்க நாடான லிபியாவில் நடந்துவரும் போட்டி அரசுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், மக்கள் பெரும் கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.



அரசுகளின் மோதல்

தலைநகர் திரிப்போலியை மையமாகக் கொண்டு பிரதமர் அப்துல் ஹமீத் பெய்பா தலைமையில் ஓர் அரசு இயங்கிவருகிறது. அதேபோல சிர்ட் எனும் கடற்கரை நகரை மையமாகக் கொண்டு ஃபாதி பகாஷா தலைமையில் அரசு ஒன்றும் நடத்தப்படுகிறது. ஃபாதி பகாஷா தன்னை பிரதமராக அறிவித்துச் செயல்பட்டுவருகிறார்.

இருவருமே தனித்தனியே போராளிக் குழுக்களை வைத்திருக்கின்றனர். ஃபாதி பகாஷா தலைமையிலான குழுக்கள் கடந்த சில வாரங்களாகத் திரிப்போலியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் வன்முறைச் சம்பவங்கள் வெடித்திருக்கின்றன.

ஆட்சி இழந்த கடாபி


லிபியாவின் சீரழிவுக்கு முதன்மைக் காரணமே கடாபி தான். 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு கடாபி, மேற்கத்திய கோரிக்கைகளுக்கு அமைய லிபியாவின் அணுஆயுத திட்டத்தை கண்காணிப்புக்கு உட்படுத்தி, லிபியாவில் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் நுழைய அனுமதி அளித்தார். ஆயினும் கடாபி, முழுமையாக பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு சரணடையவில்லை என்பதே அமெரிக்காவின் அன்றைய பிரச்சினை.

கடாபியின் ஆட்சிக்கு எதிராக, 2011இல் நேட்டோ அமைப்பின் ஆதரவுடன் பெரும் போர் நடந்தது. அதில் அவர் இறுதியாக கொல்லப்பட்டார். அமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது.

Post a Comment

0 Comments