ஆப்பிள் ஐபோன்களுக்கான ஐஓஎஸ் செயலியை உருவாக்கியதற்காக இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு ஆப்பிள் சிஇஓ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ஹனா முஹம்மது ரஃபீக் தற்போது துபாயில் பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆப்பிள் ஐபோன்களுக்கான ஐஓஎஸ் செயலியை உருவாக்குவதில் ஆர்வமுடைய இச்சிறுமி, அண்மையில் 'ஹனாஸ்' என்ற கதைசொல்லும் செயலியை உருவாக்கியிருந்தார். இந்த செயலியில் பெற்றோர்களே கதைகளை பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 9 வயது சிறுமி ஹனா உருவாக்கியுள்ள இந்த புதுமையான செயலி பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், சிறுமி ஹனாவுக்கு மின்னஞ்சல் மூலமாக வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். ''இவ்வளவு இளம் வயதில் நீங்கள் செய்த சாதனைகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள். இதைத் தொடர்ந்து செய்யுங்கள், எதிர்காலத்தில் நீங்கள் மேலும் பல அற்புதமான விஷயங்களைச் செய்வீர்கள்" என்று அந்த மின்னஞ்சலில் டிம் குக் வாழ்த்தியுள்ளார். இந்த செயலியை உருவாக்குவதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிங் எழுதியதாக சிறுமி ஹனா முஹம்மது ரஃபீக் கூறினார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments