Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

‘லண்டன் ஹோட்டலில் எனது பேக்கை யாரோ திருடிவிட்டார்கள்!’ - இந்திய வீராங்கனை தனியா பாட்டியா!



இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் இந்தியாவின் தீப்தி ஷர்மா, இங்கிலாந்தின் சார்லோட் டீனை நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ரன் அவுட் செய்தது முதல் அப்போட்டி தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.அந்த விவாதம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்காக 19 ஒருநாள் மற்றும் 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் கீப்பர்-பேட்டர் தனியா பாட்டியா ட்விட்டரில் லண்டனில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து யாரோ தனது பையைத் திருடியதாக பதிவிட்டுள்ளார்.

 

“இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேரியட் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது எனது தனிப்பட்ட அறையில் யாரோ ஒருவர் நுழைந்து பணம், கார்டுகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளுடன் கூடிய பையை திருடியுள்ளனர். இதனால் நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். இந்த இடம் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை நடைபெற்று தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமான ஹோட்டலில் இதுபோன்ற பாதுகாப்பு இல்லாதது வியக்க வைக்கிறது.” என்று தனியா பாட்டியா பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தனியாவின் ட்வீட்டிற்கு ஹோட்டல் நிர்வாகம் பதிலளித்து, அவரது விவரங்களைக் கேட்டுள்ளது.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments