Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

குளிர்சாதன பெட்டியை அப்புறப்படுத்த உதவ சென்ற நண்பர்களுக்கு அதிர்ச்சி...!

 

பிரான்சில், குளிர்சாதன பெட்டி ஒன்றை குப்பைமேட்டில் வீசுவதற்காக தனது கூட்டாளிகள் இருவரின் உதவியை நாடிய நிலையில் அத்ற்குள் பெண் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டவர் ஒருவர். தெற்கு பிரான்சிலுள்ள Mandelieu-la-Napoule என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த டென்மார்க் நாட்டவரான அந்த நபர், தனது குளிர்சாதன பெட்டி ஒன்றை குப்பைமேட்டில் வீச தன் கூட்டாளிகளிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர்கள் அந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து துர்நாற்றம் வருவதை கவனித்து, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்க, தான் தனது நாயைக் கொன்றுவிட்டதாகவும், அதை ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.

இதனையடுத்து நண்பர்கள் இருவரும் ஃப்ரிட்ஜைத் திறக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்த, அதற்குள் ஒர் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்த நிலையில், உடனே அவர்கள் பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்கள்.



பொலிசார் வந்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப, அது அந்த நபரின் மனைவி என்பதும், அந்தப் பெண் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பொலிஸார் , அந்த நபர் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு ஏராளம் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் ஒரு நாய்க்குட்டியின் உடல் ஆகியவை இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து அவரைக் கைது செய்த பொலிசார் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments