சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் சேவை நேற்றிரவு திடீரென முடங்கியது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் சேவை நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் துண்டிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் திடீரென செயல்படாமல் போனதால் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் தவிப்புக்கு ஆளாகினர். இதுதொடர்பாக ட்விட்டர் மூலமாக பயனர்கள் புகார் தெரிவித்தனர். இந்தியாவில் இரவு 10.30 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது.
இதனை ஒப்புக்கொண்ட அந்நிறுவனம், சிறிது நேரத்தில் பழுதை சரி செய்தது. மேலும் இன்ஸ்டாகிராம் சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
0 Comments