Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம்...!


சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் தனது மகனும் பட்டத்து இளவரசருமான மொஹமட் பின் சல்மானை அந்நாட்டின் பிரதமராக அறிவித்து அரச ஆணை பிறப்பித்துள்ளார்.

மொஹமட் பின் சல்மான் இதற்கு முன்னர் பிரதி பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். தற்போது பாதுகாப்பு அமைச்சராக, மன்னர் அப்துல் அஸீஸ் தனது இரண்டாவது மகன் இளவரசர் காலீத் பின் சல்மானை நியமித்து அரசாணை விடுத்துள்ளார்.

சவூதி அரேபியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்கும் அரசானையை விடுத்துள்ள அவர் இவ்வறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அது தவிர ஏற்கனவே தங்களது அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட் அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வெளி விவகார அமைச்சராக இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், நிதி அமைச்சராக மொஹமட் அல்-ஜடான், முதலீட்டு அமைச்சராக காலித் அல்-பாலிஹ் உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்களினதும் பதவிகள் அரச ஆணை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி நியமனங்களில் மாற்றங்களை மேற்கொண்டமைக்கான காரணத்தை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments