சீனா முன்னெடுத்துவரும் கொவிட் பெருந்தொற்று பூச்சிய கொள்கைக்கு எதிராக உய்குர் இன மக்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இஸ்தான்புல் நகரின் பாத்திஹ் பூங்காவில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் இஸ்லாமிய சதாத் கட்சி பிரதிநிதிகள் உட்பட சில அரசியல் கட்சிகளின் உள்ளூர் முக்கியஸ்தர்களும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய பேரவை தலைவர் செயித் தும்டுர்க் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ளனர்.
கொவிட் 19 பெருந்தொற்று பூச்சிய கொள்கையைப் பயன்படுத்தி கிழக்கு துர்கிஸ்தான் பகுதியிலுள்ள வீடுகளின் கதவுகளைப் பூட்டும் சீனாவின் நடவடிக்கைக்கு இங்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
0 Comments