சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்தது. சென்னை தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.
நேற்று பவுனுக்கு ரூ.308 உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்து 144-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்தது. இதனால் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 920-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments