இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரின் அரையிறுதிப் போட்டி இன்றைய (30) தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த இந்தப் போட்டி திகதி மாற்றப்பட்டிருக்கும் அதே நேரம் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக பாதியில் இடைநிறுத்தப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி. லெஜண்ட்ஸ் 17 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்ட இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது.
டி.எம். டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணி ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் தோல்வியுறாத அணியாகவே அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை (01) மாலை 7.30க்கு ரைப்பூரில் திட்டமிட்டபடி நடைபெறும்.
0 Comments