Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

புதிய பதவியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் பதவியிலிருந்து விலகிய மஹேல...!

 

தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியைத் தொடர்ந்து IPL அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விலகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்களுக்குச் சொந்தமான 3 அணிகளுக்கும் 'Global Head of Performance' (வெளிப்பாடு தொடர்பான உலகளாவிய தலைவர்) எனும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பல்வகைப்பட்ட கூட்டுநிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனமே மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களாவர்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு IPL T20 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணி, CAS T20 தொடரின் MI Cape Town, ILT20 தொடரின் MI Emirates ஆகிய மூன்று அணிகள் உள்ளன.

அதற்கமைய, தனது வழக்கமான பயிற்சி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, குறித்த 3 அணிகளுக்கும் புதிய வீரர்களை தெரிவு செய்வது தொடர்பில் அவர்களது வெளிப்பாடுகளை அவதானித்தல் உள்ளிட்ட விடயங்களை மஹேல ஜயவர்தன மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வணிகளின் ஒட்டுமொத்த மூலோபாய திட்டமிடல், ஒருங்கிணைந்த உலகளாவிய உயர் செயல்திறன் தொகுதியொன்றை உருவாக்குவதிலும் அவர் கவனம் செலுத்துவார்.

இதேவேளை, சஹீர் கான் கிரிக்கெட் மேம்பாட்டு உலகளாவிய தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் திறமையாளர்களை வளர்ப்பது தொடர்பான பணியை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments