Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தமிழகத்தில் குறைவாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி...!

 

தமிழகத்தில் குறைவாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 100 யூனிட்டிற்குள்ளாக மினசாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். 100 யூனிட்டுக்கு கீழே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமாகும். 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 36 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு 72 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 82 ஆயிரம் பேர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 147 ரூபாய் 50 பைசா என்ற அளவில் குறைந்த கட்டணங்கள் மட்டுமே உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. Also Read - தமிழகத்தில் குறைவாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி இதே கட்டணங்களை அருகில் உள்ள கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில், 0 முதல் 100 யூனிட் வரை அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே 4 ரூபாய் 30 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 100 யூனிட் வரை அனைத்து நுகர்வோருக்கும் இலவசம்.

குஜராத்தில், 0 முதல் 100 யூனிட் வரை 5 ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் மின் நுகர்வோருக்கு 4 ரூபாய் 50 பைசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, அருகில் கர்நாடகா, மத்திய அரசால் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய குஜராத் மாநிலமாக இருந்தாலும் சரி அவர்களைவிட மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

குறு சிறு நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2 லட்சத்து 26 ஆயிரம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு 50 பைசா கட்டணம் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிலையில் உள்ள 19 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கும் 50 பைசா மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் தமிழக அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன் சுமை காரணமாக மின்சார வாரியம் இழுத்து மூடக்கூடிய சூழ்நிலை இருந்தது. திமுக அரசு ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்தின் காரணமாகவே மின்சார வாரியம் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments