Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெரும்போகத்திற்கான உர விநியோகம்...

 

பெரும்போகத்திற்கு தேவையான யூரிய உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்திற்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக விநியோகிக்கவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் E.H.M.L.அபேரத்ன குறிப்பிட்டார்.

முதல்கட்டமாக ஒரு ஹெக்டேயர் நெற்செய்கைக்காக 20 கிலோ கிராம் யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கே யூரியா உரத்தை முதலில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் E.H.M.L.அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments