இதுபோன்ற ஒருவித தூக்கநிலை மாற கஃபைன் பானங்களை நிறையப்பேர் அருந்துகின்றனர். ஆனால் கஃபைன் அதிகம் நிறைந்த பானங்கள் உடலுக்கு நல்லதல்ல. இது பதற்றம் அல்லது கவலையை உருவாக்கும். எனவே அரைதூக்க நிலைக்காக காரணத்தை கண்டறிந்து அதற்கு முறையாக சிகிச்சை எடுக்கவேண்டும்.
1. வாழ்க்கைமுறை: அரைதூக்க நிலைக்கு வாழ்க்கைமுறை மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இரவில் நீண்ட நேரம் வேலை செய்தல் அல்லது சில மணிநேரங்கள் மட்டுமே தூங்குதல் போன்றவையும் பகலில் அரை தூக்க நிலையிலேயே வைத்திருக்கும்.
2. குறிப்பிட்ட மருந்துகள்: உடல்நல பிரச்னைகளுக்காக சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வோருக்கு பகலிலும் ஒருவித மயக்கம் போன்ற உணர்வு இருக்கும். அதிக டோஸ் மருந்துகளை எடுத்துக்கொள்வது இதுபோன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
3. மன ஆரோக்கியம்: சில மனநல பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு சரியாக தூங்க முடியாது. அவர்கள் எப்போதும் ஒருவித அரைதூக்க நிலையிலேயே இருப்பர். இது மனபதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குள் தள்ளிவிடும்.
4. தூக்கக் கோளாறு: தூக்கக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒருவித மயக்கநிலை எப்போதும் இருக்கும். தூக்கக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு சரியாக தூங்கமுடியாது. அது அரைதூக்க நிலை மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்னைகளுக்கு அடித்தளமிடும்.
0 Comments