Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காத்தான்குடியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 22 வயதான இளைஞனுக்கு 18 வரை விளக்கமறியல்…!

 

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்துக நபரான 22 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் நேற்று (04)செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து சம்பவதினமான கடந்த 2 ஆம் திகதி அப்பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து பாலியால் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் குறித்த இளைஞனை கைது செய்து செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments