Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரபல மல்யுத்த வீராங்கனை சாரா லீ 30 வயதில் திடீர் மரணம்...!

 

பிரபல மல்யுத்த வீராங்கனை சாரா லீ தன்னுடைய 30வது வயதில் மரணமடைந்து உள்ளார்.

பொழுதுபோக்கு குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE முன்னாள் மல்யுத்த வீராங்கை சாரா லீ. WWE-ல் 2015, 2016 காலகட்டங்களில் பிரபல மல்யுத்த வீராங்கனையாக அறியப்பட்டவர். 2015ல் WWE-ன் ‘டஃப் எனாஃப்’ (Tough Enough ) நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வானார். அதன் பின் விளையாட்டு துறையில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். சாராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சாராவின் மாரணத்துக்கான காரணங்களை இதுவரை அவரது குடும்பத்தினர் வெளியிடவில்லை. இருப்பினும் அவருக்கு கடுமையான சைனஸ் பிரச்சனை இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சாரா லீயின் மரணத்தைத் தொடர்ந்து, WWE ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 'முன்னாள் "‘டஃப் எனாஃப்’ " வெற்றியாளரான, லீ விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உலகில் பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராகத் தொடர்ந்து செயல்பட்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சாரா லீயின் தாயார் டெரி லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில்,” சாரா லீயின் மரணம் குறித்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். அவளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ‘ என்றுள்ளார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments