பிரித்தானியாவில் எரிவாயு விநியோகம் குறைந்தால் குளிர்காலத்தில் மூன்று மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான தேசிய கிரிட் எச்சரித்துள்ளது.
இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என தெரிவித்துள்ளதுடன் நெருக்கடி அதிகரித்தால் விநியோக குறுக்கீடுகள் சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக தேவை உள்ள நேரங்களில், ஒருவேளை காலை அல்லது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments