Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சலுகைகளுடன் புதிய விசா நடைமுறை இன்று முதல்..!


புதுப்பிக்கத்தக்க 5 ஆண்டு பசுமை குடியிருப்பு விசா உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமிரகத்தின் புதிய விசா விதிகள் இன்று (03) முதல் அமுலுக்கு வருவதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் வெளிநாட்டினரை ஊக்குவிக்கும் வகையில் இதில் பலவேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,10 ஆண்டு விரிவாக்கப்பட்ட தங்க விசா திட்டம், திறமையான தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் ஆகியவை அடங்கும்.

மேலும் சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கு பல நுழைவு அதாவது, 90 நாட்கள் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க முடியும். கிரீன் விசா வைத்திருப்பவரின் அனுமதி காலாவதியானால், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்.



* ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய குடியேற்றச் சட்டங்களின் கீழ், ஐந்தாண்டு பசுமை விசா, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது அவர்களது முதலாளிகளின் உதவியின்றி வெளிநாட்டினர் தங்களை ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கும். பிரீலான்ஸர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த விசாவிற்கு தகுதியுடையவர்கள்.

* இப்போது, பசுமை விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்யலாம்.

* பசுமை விசா வைத்திருப்பவரின் அனுமதி காலாவதியாகிவிட்டால், அதை புதுப்பிக்க ஆறு மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்.

* கோல்டன் விசாவின் கீழ் 10 வருட விரிவாக்கப்பட்ட தங்குமிடமும் வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விதிவிலக்கான திறமைகள் கொண்ட தனிநபர்கள் தங்க விசாவிற்கு தகுதியுடையவர்கள்.

* கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்யலாம்.

* கோல்டன் விசா வைத்திருப்பவரின் குடும்ப உறுப்பினர்களும், விசா செல்லுபடியாகும் வரை, வைத்திருப்பவரின் மறைவுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கலாம்.

* புதிய குடியேற்றச் சட்டங்களின்படி,கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் வணிகத்தின் 100 சதவீத உரிமையின் பலனை அனுபவிப்பார்கள்.

* புதிய விதிகளின்படி, சுற்றுலா விசா பார்வையாளர்களை 60 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க அனுமதிக்கும்.

* ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசா, பார்வையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும்.

* வேலை ஆய்வு விசா, ஸ்பான்சர் அல்லது புரவலர் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை வாய்ப்புகளைத் தேட நிபுணர்களை அனுமதிக்கும்.

Post a Comment

0 Comments