குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கைகயில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய சைபர் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் காள்ளும் எதிர் நடவடிக்ககளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐ.நா. பொதுச்சபையின் 77வது மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெ ளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளிவிவகார அமைசச்ர் அன்தனி பிளிங்கன், அவுஸ்திரேலியாவின் பென்னி வொஸ், ஜப்பானின் ஹயாஷி யொஷிமாஸா ஆகியோர் தனியாக நடத்திய கூட்டத்தின் பின்னரேயே இக்கூட்டறிக்ைக வெளியிடப்பட்டது.
பணய தாக்குதலுக்கு எதிரான அறிக்கை என அழைக்கப்படும் இந்த அறிக்ைகயில் ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு, நிதிப் பிரிவு, வர்த்தக முயற்சிகள், மிக முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் பிரத்தியேக தரவுகள் என்பனவற்றை இந்த பணய தாக்குதல் மிக மோசமாக பாதிப்பதாகவும், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சைபர் குற்றங்களுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பணய தாக்குதலுக்கு எதிரான முயற்சிகளுக்கு 36 நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணய தாக்குதல் என்பது நாடுகளின் மிக முக்கியமான நிதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கட்டமைப்புகளின் மீது சைபர் தாக்குதல் நடத்துவதாக பயமுறுத்துவது மற்றும் தாக்குதல் நடத்தி அக்கட்டமைப்புகளை தன்வசம் எடுத்துக்ெகாண்டு அவற்றை பணயமாக வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிகொள்வதைக் குறிக்கும்.
இத்தகைய தாக்குதல்கள் சீன, ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து நடைபெறுவதாக குவாட் நாடுகள் கருதுகின்றன.
இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளில் பிரயோகிக்கப்படக்கூடிய சைபர் தாக்குதல்களை முறியடிக்கவும் தாக்குப் பிடிக்கவும் நாம் மேலும் நாடுகளுடன் இணைந்து செயல்படவுள்ளோம்.
இப் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு சைபர் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிரான நாம் இணைந்து செயல்படுவோம் எனவும் இந்த கூட்டறிக்ைகயில் குறிப்பிப்பட்டுள்ளது.
0 Comments