Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகின் மிகப் பெரிய இலத்திரனில் பஸ் தரிப்பு நிலையம் கத்தாரில் திறந்து வைப்பு...!


உலகின் மிகப் பெரிய இலத்திரனில் பஸ்தரிப்பு நிலையம் கத்தாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் லுசைல் நகரில் இந்த இலத்திரனியல் பஸ்தரிப்பு நிலையம் கத்தாரின் போக்குவரத்து அமைச்சர் H E Jassim Saif Ahmed Al Sulaiti அவர்களினால் கடந்த (18.10.2022) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 478 பஸ் வண்டிகள் தரிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் இந்த முயற்சியானது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்தின் அங்கீகாரம் கடந்த 16.10.2022 அன்று கத்தாரின் போக்குவரத்து அமைச்சிடம் கின்னஸ் அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. (படம் காண்க)


இந்த பஸ்தரிப்பு நிலையமானது 400,000 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 பல்நோக்கு கட்டிடங்கள், பஸ் பேக்கள், சேவை வசதிகள்(கராஜ்), பொழுதுபோக்கு வசதிகள், பசுமையான இடங்கள் மற்றும் துணை மின்நிலையங்களுடன் கத்தார் போக்குவரத்து துறை ஊழியர்கள் 1400 பேருக்கான தங்குமிட வசதிகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



THANKS - QATAR - TAMIL

Post a Comment

0 Comments