Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கிரிக்கெட் உலகில் பரம வைரிகளாக கருதப்படுவதும் முழு கிரிக்கெட் உலகினாலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுவதுமான இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் 'உலகப் போர்' இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

ஏழாவது அத்தியாயத்தில் போன்றே இம்முறையும் சுப்பர் 12 சுற்றில் ஒரே குழுவில் (குழு 1) இடம்பெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பேர்த் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருட உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இரண்டு அணிகளுக்கும் இது ஆரம்பப் போட்டியாக அமைவதால் இரண்டு அணிகள் மட்டுமல்லாமல் இரண்டு நாடுகளினதும் இரசிகர்களும் பரபரப்புடன் இந்தப் போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த வருட உலகக் கிண்ணப் போட்டியின் சுப்பர் சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்தியா அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது.

மேலும் இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது அதுவே முதல் தடவையாகும். அந்தத் தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இன்றைய போட்டியில் இந்தியா பதிலடிகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சந்தித்துக்கொண்டபோது முதல் சுற்றில் இந்தியாவும் பிரதான சுற்றில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றிருந்தன.

இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இந்தப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இரண்டு அணிகளிலும் பிரபல வீரர்கள் பலர் இடம்பெறுகின்றனர்.

இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கே. எல். ராகுல், விராத் கோஹ்லி, ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவ்ணேஷ்வர் குமார், அக்சார் பட்டேல் ஆகியோரும் பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத், ஷஹீன் ஷஹீத அப்றிடி, ஹரிஸ் ரவூப் ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர்.ஃ

Pakistan: 1 Mohammad Rizwan, 2 Babar Azam, 3 Shan Masood, 4 Shadab Khan, 5 Haider Ali, 6 Iftikhar Ahmed, 7 Mohammad Nawaz, 8 Asif Ali, 9 Shaheen Shah Afridi, 10 Naseem Shah, 11 Haris Rauf.

India 1 Rohit Sharma, 2 KL Rahul, 3 Virat Kohli, 4 Suryakumar Yadav, 5 Hardik Pandya, 6 Dinesh Karthik, 7 Axar Patel, 8 R Ashwin, 9 Mohammed Shami, 10 Bhuvneshwar Kumar, 11 Arshdeep Singh.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments